"வெளிநாட்டு வர்த்தகம் இனி இந்திய ரூபாயில் சாத்தியமாகும்" - மத்திய அமைச்சர் அறிவிப்பு
வெளிநாட்டு வர்த்தகத்தை இந்திய ரூபாய் மூலம் செய்வதற்கான காலம் நெருங்கி விட்டதாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் இந்திய வங்கிகளில் வோஸ்த்ரோ கணக்குகளைத் தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் வர்த்தகர்கள் இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பணம் செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
18 நாடுகளைச் சேர்ந்த 60 வங்கிகளின் விண்ணப்பத்தை ஏற்று வோஸ்த்ரோ கணக்கைத் தொடங்குவதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளதாகவும், பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Comments